Skip to main content
22/11/22 அன்று காலை தமிழ்நாடு யாதவ மகாசபையின் பெரம்பலூர் மாவட்ட தலைவர் திரு.N.முத்தையா அவர்களது தலைமையில், மாவட்ட செயலாளர் திரு.S.செல்வராஜ், மாவட்ட பொருளாளர் திரு.P.முத்துசாமி மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, ஊராட்சி நிர்வாகிகள் சுமார் 40க்கும் மேற்பட்டோர், தமிழ்நாடு யாதவ மகாசபை தலைவர் டாக்டர்.நாசே.ஜெ.ராமச்சந்திரன் அவர்களை, அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றனர். அப்போது மாவட்டத் தலைவர் திரு. N.முத்தையா அவர்கள் அண்மையில் படுகொலை செய்யப்பட்ட மாயாண்டி மற்றும் பூசாரி சிதம்பரம் குடும்பத்தாருக்கு பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு யாதவ மகாசபை சார்பில் நிவாரண தொகையாக ரூபாய் ஒரு லட்சம் நிதி வழங்குவதாக அறிவித்தார். உடன் மாநில பொதுச் செயலாளர் திரு.AM.செல்வராஜ், மாநில பொருளாளர் திரு.K.எத்திராஜ், மாநில இளைஞரணி பொதுச் செயலாளர் திரு.பொட்டல் துரை, மற்றும் மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் திரு.K.சபாபதி ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave a Reply