தமிழ்நாடு யாதவ மகாசபை பெரம்பலூர் மாவட்டத்தின் சார்பில்,
26-02-2023 இன்று நடந்த யாதவர் குடும்ப விழா வில் கிட்டத்தட்ட 8,000 க்கும் மேற்பட்ட யாதவ உறவுகள் கலந்துகொண்ட மிக பிரம்மாண்டமான மாநில மாநாடு போன்று குடும்ப விழா இன்று பெரம்பலூரில் மிக சிறப்பாக நடைபெற்றது.
இதில் பெருந்திரளாக மகளிர் அணியினர் கலந்து கொண்டது விழாவின் சிறப்பு அம்சமாகும்.
முன்னதாக 2000 பேர் கலந்து கொண்ட மாபெரும் இரு சக்கரம் மற்றும் வாகன பேரணி பாலக்கரையிலிருந்து துவங்கி விழா அரங்கம் அமைந்துள்ள துரைமங்கலம் JK.மகால் வரை நடைபெற்றது.
விழா அரங்கம் வந்தடைந்த தலைவர் டாக்டர்.நாசேயார் அவர்களை அதிர்வேட்டுக்கள் முழங்க, செண்டை மேளத்துடன், மகளிர் அணியினர் ஆரத்தி எடுத்து வரவேற்க,
கடல் அலைகளா, மனித தலைகளா என வியக்கும் வண்ணம் மக்கள் வெள்ளத்தில் இளைஞர் அணியினரின் பாதுகாப்பு வளையத்துடன் தலைவர் டாக்டர்.நாசேயார் அவர்களை விழா மேடைக்கு அழைத்து சென்றனர்.
இவ்விழாவினை பெரம்பலூர் மாவட்ட யாதவ மகாசபை தலைவர் திரு.ந.முத்தையா யாதவ் அவர்கள் தலைமையில்,
மாநிலத் தலைவர் டாக்டர்.நாசே.J.இராமச்சந்திரனார் அவர்களும்,
மாநில பொதுச்செயலாளர் திரு.வேலு.மனோகரன் அவர்களும்,
மாநில பொருளாளர் திரு.K.எத்திராஜ், அவர்களும்,
மூத்த துணைத்தலைவர்கள் கொம்பூதி திரு.AM.செல்வராஜ், திரு.MR.பன்னீர்செல்வம், திரு.MKR.மெய்யப்பன்,
வழக்கறிஞர் அணி செயலாளர் திரு.K.சபாபதி,
மாநில இணை பொதுச்செயலாளர்கள் மூத்த தளபதி திரு.OMB.இராமதாஸ், கோவை திரு.இரா.தங்கப்பழம் தென்காசி திரு.T.கோமதிநாயகம்
பெரம்பலூர் மாவட்ட மேலிட பொறுப்பாளரும், மாநில துணைத்தலைவர் நெய்வேலி பொறியாளர் திரு.A.அண்ணாமலை
இளைஞர் அணி பொதுச்செயலாளர் இளைஞர்களின் எழுச்சி நாயகன் பொட்டல் திரு.S.துரை யாதவ்
மாநில மகளிர் அணி தலைவி அன்னை டாக்டர்.M.முத்துலட்சுமி
மாநில செயலாளர்கள் திருவெற்றியூர் திரு.K.இராஜன் திரு.NI.சக்திவேல்,
தஞ்சை மண்டல தலைவர் திரு.TKG.கண்ணன்
ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டத்தில் பல்வேறு பெயர்களில் இயங்கிய சமுதாய அமைப்புகளை ஒருங்கிணைத்து தமிழ்நாடு யாதவ மகாசபை யுடன் இணைக்க முக்கிய பாலமாக திகழ்ந்த அய்யா கோவில்பட்டியாரின் தளபதி, ஆவினங்குடி திரு.N.இராமசாமி, சமுதாய பற்றாளர் விழுப்புரம் திரு.D.ரவிசங்கர்
மற்றும்
மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள்.
தலைவர் டாக்டர்.நாசேயார் அவர்களின் சிறப்புரையில் பெரம்பலூர் மாவட்ட தலைவர், மாவீரர் திரு.ந.முத்தையா அவர்களை சூப்பர் ஸ்டார் என போற்றி பாராட்டினார்.
பெரம்பலூர் மாவட்ட மாணவ மாணவியற்கு தலைவர் தனது சொந்த நிதியில் ₹50,000.00 வழங்கினார்கள்.
மதிய உணவு, உணவுக்கூடம் நிரம்பி வழிந்து திறந்த வெளியில் பந்தலிட்டு விழாவிற்கு வந்திறந்த அனைவருக்கும் அறுசுவை உணவு அளிக்கப்பட்டது.
மகாசபை வரலாற்றில் மாநில மாநாடா, மாவட்ட மாநாடா என வியக்கும் வண்ணம் மற்ற மாவட்டங்களுக்கு முன்னுதாரணமாய் மிக பிரமாண்டமான குடும்ப விழா பெரம்பலூரில் இன்று நடத்தி காட்டிய சூப்பர் ஸ்டார் திரு.N.முத்தையா
போன்று ஒவ்வொரு மாவட்டத்திலும் குடும்ப விழாக்கள் நடத்தி நம்முடைய ஒற்றுமையை நிலைநிறுத்துவோம்!!!
பெரம்பலூர் மாவட்ட குடும்ப விழா நிகழ்ச்சியில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற முதல் மூன்று மாணவ மாணவிகளுக்கு ஊக்கத் தொகையாக தலா ரூபாய் 25,000, 15,000, 10,000 விகிதம், சுமார் ஐந்து லட்சம் ரூபாய், காசோலையாக வழங்கப்பட்டது..