மண்டல தலைவர்கள் திரு.TKG.கண்ணன் சைதை.திரு.K.மனோகரன், மாநில மாணவர் அணி செயலாளர்.திரு. பிரகாஷ் மற்றும் தமிழகம் எங்கும் உள்ள மாநிலம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு யாதவ மகாசபையின் தலைவர் டாக்டர்.நாசே.ஜெ.ராமச்சந்திரன் அவர்கள் சமுதாயத்தை தலை நிமிர செய்வேனே தவிர, எந்த நேரத்திலும் நம் சமுதாயத்தை யாருடனும் அடகு வைக்க மாட்டேன் என்று உத்வேகத்துடன் உரையாற்றினார் முடிவில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற முதல் மூன்று மாணவ மாணவியர்களுக்கு ஊக்கத் தொகையாக தலா 5,000 விகிதம் 50,000 நன்கொடை வழங்கினார். பின்னர் நீட் இணை வழி கட்டணமில்லா பயிற்சி, 09/04/23 வரும் ஞாயிறு காலை 10 மணி அளவில் அமெட் பல்கலைக்கழகத்தில் துவங்கப்பட உள்ளது, அதற்கான அழைப்பிதழை அனைவருக்கும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி மிக சீரோடும் சிறப்போடும், உணர்ச்சி பொங்க, எழுச்சியுடன் உரையாற்றிய தலைவர்கள், ஆர்ப்பரித்த நிர்வாகிகள், அரசு கவனத்திற்கு கொண்டு சென்ற சிறப்பான தீர்மானங்கள், மதிய உணவுக்குப் பிறகு மீண்டும் கூட்டம் தொடங்கி மண்டல மற்றும் மாநில மாநாடு எங்கு எப்போது நடத்தலாம் என்ற ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது.