Skip to main content

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

தமிழ்நாடு யாதவ மகாசபை தலைவர் டாக்டர்.நாசே. ஜெ.ராமச்சந்திரன் அவர்களின் அறிவுறுத்தலின்படி ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஆற்காடு, வேலூர் மெயின் ரோட்டில் உள்ள கணேச விஜயலட்சுமி மண்டபத்தில் 31/10/22 பிற்பகல் 3 மணி அளவில், மாநில இணை பொதுச் செயலாளர் திரு.N.S.சேதுமாதவன் அவர்கள் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
திரு.D.ஜவகர்யாதவ் அவர்கள் வரவேற்க ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில், தமிழ்நாடு யாதவ மகாசபை மாநில நிர்வாகிகள், பொருளாளர் திரு.K.எத்திராஜ், துணைத் தலைவர்கள் திரு. M.R.பன்னீர்செல்வம், திரு.M.K.R. மெய்யப்பன், மாநில அமைப்புச் செயலாளர் திரு.O.M.B.ராமதாஸ், மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் திரு.K.சபாபதி, மாநில இணைப் பொதுச் செயலாளர்
திரு.S.செல்வன்யாதவ் மற்றும் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பலரும் தங்கள் வரவேற்கத்தக்க கருத்துக்களை பதிவு செய்தனர்… நிகழ்ச்சியின் முடிவில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியோரை தேர்வு செய்து அதற்கான ஆணையை வழங்கப்பட்டது…திரு.K. சரவணன் அவர்கள் நன்றியுரை ஆற்றி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்…

Leave a Reply