09-03-2023 புதன்கிழமையன்று சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலை, கானாத்தூரில் உள்ள அமெட் பல்கலைக்கழக வளாகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. அதில் அமெட் பல்கலைக்கழக வேந்தர், டாக்டர்.நாசே.ஜெ.ராமச்சந்திரன் அவர்கள் தன்னுடைய நீண்ட நெடிய பயணத்தின் அனுபவங்களை பற்றி கூறி, கூடியிருந்தவர்களையும் மாணவர்களையும் பிரமிப்பில் ஆழ்த்தினார். அவர் கூறியதாவது, 1990களில் தமிழகத்தில் ஏராளமான பொறியியல் கல்லூரிகள் இருந்தன, தனது மாறுபட்ட சிந்தனையில், தொலைநோக்குப் பார்வையில் உதித்தது தான் இந்த அமெட் கடல்சார் பொறியியல் கல்லூரி. அப்போது, தான் எடுத்த முடிவுகளும், எதிர்கொண்ட சவால்களும், ஆற்றிய பணிகளும், உழைத்த உழைப்பும்தான், அமெட் பொறியியல் கல்லூரி, பல்கலைக்கழகமாக மாறி, இன்று உலகளாவிய பிரபலமான கல்லூரிகளில் ஒன்றாக திகழ்கிறது என்பதில் பெருமை கொள்கிறேன்.
தற்போது, உலகில் உள்ள கப்பல் துறை சார்ந்த அனைத்து பணிகளிலும், அமெட் பல்கலைக்கழகத்தில் பயின்ற பெரும்பாலான மாணவர்களே பணியாற்றுகின்றனர் என்பது எங்கள் வெற்றி, கூடுதல் பெருமையும் கூட, என்னை பொறுத்தவரை, உழைப்பு, உழைப்பு, உழைப்பு, அதுவே எனது தாரக மந்திரம், காரணம் அதற்கான பலன் நிச்சயம் ஒரு நாள் நமக்கு கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த வெற்றிக்கு காரணம் நான் மட்டுமல்ல அப்போது என்னுடன் பணியாற்றிய, அனுபவம் வாய்ந்த பணியாளர்கள், எனக்கு ஒத்துழைப்பு நல்கிய எனது மனைவி, பிள்ளைகள், நண்பர்கள் என அனைவராலும் சாத்தியமாயின என உரையாற்றினார். ஆம், இந்த தனி மனிதனின் உழைப்பால் பல ஆயிரம் பேர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
முடிவில் அமெட் பல்கலைக்கழக வேந்தர் டாக்டர்.நாசே.ஜெ.ராமச்சந்திரன் அவர்களுக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை சார்பில் மூத்த துணைத் தலைவர் திரு.A.M.செல்வராஜ், மாநில இணை பொதுச்செயலாளர் திரு.OMB.ராமதாஸ், மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் திரு.K.சபாபதி, சென்னை மண்டல தலைவர், திரு.K.மனோகரன், மாநில செயலாளர்கள் திரு.காசிநாதன் மற்றும் திரு.K.ராஜன் ஆகியோர் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர், துணைவேந்தர் திரு.திருவாசகம் அவர்களும் உடன் இருந்தார்.